21 குருவாகிய ஆரோனின் சந்ததியில் யாருக்காவது குறைபாடு இருந்தால், அவன் யெகோவாவுக்குத் தகன பலிகளைச் செலுத்தக் கூடாது. அவனுக்குக் குறைபாடு இருப்பதால், கடவுளுக்கு உணவைப் படைக்கக் கூடாது. 22 கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவில் பரிசுத்தமானதையும் மகா பரிசுத்தமானதையும் அவன் சாப்பிடலாம்.+