உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 2:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 மீதியிருக்கும் உணவுக் காணிக்கை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சேர வேண்டும். யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலியில் இது மகா பரிசுத்தமானது.+

  • லேவியராகமம் 6:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உணவுக் காணிக்கைக்கான சட்டம் இதுதான்:+ உணவுக் காணிக்கையைப் பலிபீடத்தின் முன்பு யெகோவாவின் முன்னிலையில் ஆரோனின் மகன்கள் படைக்க வேண்டும்.

  • லேவியராகமம் 6:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 மீதியிருக்கும் மாவில் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சுட்டு ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அதாவது, சந்திப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில் சாப்பிட வேண்டும்.+

  • லேவியராகமம் 22:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 தகுதி இல்லாத ஒருவன்* பரிசுத்தமான எதையும் சாப்பிடக் கூடாது.+ குருவானவரின் வேறு தேசத்து விருந்தாளியோ கூலியாளோ பரிசுத்த பொருள்களில் எதையும் சாப்பிடக் கூடாது.

  • லேவியராகமம் 24:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ஒவ்வொரு ஓய்வுநாளிலும் யெகோவாவின் முன்னிலையில் அவை அடுக்கி வைக்கப்பட வேண்டும்.+ இது இஸ்ரவேலர்களோடு நான் செய்திருக்கிற நிரந்தர ஒப்பந்தம். 9 அந்த ரொட்டிகள் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சேர வேண்டிய பங்கு.+ யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலிகளில் அவை மகா பரிசுத்தமானவையாக இருப்பதால் அவற்றைப் பரிசுத்த இடத்தில் அவர்கள் சாப்பிட வேண்டும்.+ இது நிரந்தரக் கட்டளை” என்றார்.

  • எண்ணாகமம் 18:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 தகன பலியாகச் செலுத்தப்படுகிற மிகவும் பரிசுத்தமான பலிகளில் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். உணவுக் காணிக்கை,+ பாவப் பரிகார பலி,+ குற்ற நிவாரண பலி+ என ஜனங்கள் எனக்குக் கொண்டுவருகிற எல்லா பலிகளிலும் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். அது உனக்கும் உன் மகன்களுக்கும் மிகப் பரிசுத்தமானது.

  • எண்ணாகமம் 18:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குச் செலுத்துகிற பரிசுத்த காணிக்கைகள் எல்லாவற்றையும்+ நான் உனக்கும் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் நிரந்தரப் பங்காகக் கொடுத்திருக்கிறேன்.+ இது உன்னோடும் உன் வம்சத்தாரோடும் யெகோவா செய்கிற நிரந்தர ஒப்பந்தம்”* என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்