-
எண்ணாகமம் 18:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 “நீ லேவியர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘இஸ்ரவேலர்கள் கொடுக்கும் பத்திலொரு பாகம் உங்களுக்குக் கிடைக்கும். அதை நான் அவர்களிடமிருந்து வாங்கி உங்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன்.+ நீங்கள் அந்தப் பத்திலொரு பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை எடுத்து யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.+
-
-
எண்ணாகமம் 31:28, 29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 போருக்குப் போன வீரர்களுக்குக் கொடுக்கிற மனுஷர்களிலும், மாடுகளிலும், கழுதைகளிலும், ஆடுகளிலும் 500-க்கு ஒன்றைப் பிரித்தெடுத்து யெகோவாவுக்காகக் கொடுக்க வேண்டும். 29 அவர்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கிலிருந்து இந்த மனுஷர்களையும் மிருகங்களையும் பிரித்தெடுத்து யெகோவாவுக்குக் காணிக்கையாகக் குருவாகிய எலெயாசாரிடம் கொடுக்க வேண்டும்.+
-