-
லேவியராகமம் 5:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர அவனுக்கு வசதியில்லை என்றால், ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு*+ நைசான மாவைப் பாவப் பரிகாரத்துக்கான காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். அதன்மேல் எண்ணெய் ஊற்றவோ சாம்பிராணியை வைக்கவோ கூடாது. அது பாவப் பரிகாரத்துக்கான காணிக்கை. 12 அதை அவன் குருவானவரிடம் கொண்டுவர வேண்டும். குருவானவர் அதிலிருந்து ஒரு கைப்பிடி மாவை எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாகப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். அதாவது, யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலிகள்மேல் எரிக்க வேண்டும். அது பாவப் பரிகார பலி.
-
-
லேவியராகமம் 6:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 “ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘பாவப் பரிகார பலியின் சட்டம் இதுதான்:+ வழக்கமாகத் தகன பலி வெட்டப்படுகிற இடத்தில்+ பாவப் பரிகார பலியையும் யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். அது மிகவும் பரிசுத்தமானது. 26 பாவப் பரிகார பலியைச் செலுத்துகிற குருவானவர் அதைச் சாப்பிட வேண்டும்.+ பரிசுத்த இடத்தில், அதாவது சந்திப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில், அதைச் சாப்பிட வேண்டும்.+
-