13 இப்படிப்பட்ட பாவங்களில் எதை அவன் செய்திருந்தாலும், அதற்காகக் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ மீதமுள்ள மாவு, உணவுக் காணிக்கையைப்+ போலவே குருவானவருக்குச் சொந்தமாகும்’”+ என்றார்.
9 தகன பலியாகச் செலுத்தப்படுகிற மிகவும் பரிசுத்தமான பலிகளில் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். உணவுக் காணிக்கை,+ பாவப் பரிகார பலி,+ குற்ற நிவாரண பலி+ என ஜனங்கள் எனக்குக் கொண்டுவருகிற எல்லா பலிகளிலும் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். அது உனக்கும் உன் மகன்களுக்கும் மிகப் பரிசுத்தமானது.