உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 14:49-53
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 49 அந்த வீட்டைத் தீட்டிலிருந்து சுத்திகரிப்பதற்காக, இரண்டு பறவைகளையும் தேவதாரு மரக்கட்டையையும் கருஞ்சிவப்பு துணியையும் மருவுக்கொத்தையும் அவர் கொண்டுபோக வேண்டும்.+ 50 பின்பு, அந்தப் பறவைகளில் ஒன்றை ஊற்றுநீருள்ள ஒரு மண்பாத்திரத்தில் வைத்துக் கொல்ல வேண்டும். 51 தேவதாரு மரக்கட்டையையும் மருவுக்கொத்தையும் கருஞ்சிவப்பு துணியையும் உயிரோடிருக்கிற பறவையையும் எடுத்து, ஊற்றுநீரில் கொல்லப்பட்ட அந்தப் பறவையின் இரத்தத்தில் முக்கியெடுக்க வேண்டும். பின்பு, அந்த இரத்தத்தை அந்த வீட்டின் முன்னால் ஏழு தடவை அவர் தெளிக்க வேண்டும்.+ 52 கொல்லப்பட்ட பறவையின் இரத்தம், ஊற்றுநீர், உயிரோடிருக்கிற பறவை, தேவதாரு மரக்கட்டை, மருவுக்கொத்து, கருஞ்சிவப்பு துணி ஆகியவற்றால் அந்த வீட்டைத் தீட்டிலிருந்து அவர் தூய்மைப்படுத்த வேண்டும். 53 பின்பு, உயிரோடிருக்கிற பறவையை நகரத்துக்கு வெளியே வெட்டவெளியில் விட்டுவிட்டு அந்த வீட்டைச் சுத்திகரிக்க வேண்டும். அப்போது, அது தீட்டில்லாததாக இருக்கும்.

  • எண்ணாகமம் 19:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதன்பின், தேவதாரு மரக்கட்டையையும் மருவுக்கொத்தையும்+ கருஞ்சிவப்பு துணியையும் குருவானவர் எடுத்து, அந்தப் பசு எரிக்கப்படுகிற நெருப்பில் போட வேண்டும்.

  • எண்ணாகமம் 19:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 தீட்டில்லாத ஒருவர் அந்தப் பசுவின் சாம்பலை+ எடுத்து, முகாமுக்கு வெளியே சுத்தமான ஒரு இடத்தில் கொட்ட வேண்டும். சுத்திகரிப்பு நீரைத்+ தயாரிப்பதற்காக ஜனங்கள் அந்தச் சாம்பலை அங்கே வைத்திருக்க வேண்டும். அந்தப் பசுதான் பாவப் பரிகார பலி.

  • சங்கீதம் 51:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 மருவுக்கொத்தால் என் பாவத்தை நீக்குங்கள், அப்போது நான் சுத்தமாவேன்.+

      என்னைக் கழுவுங்கள், அப்போது நான் பனியைவிட வெண்மையாவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்