உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 30:34-36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அதன்பின் யெகோவா மோசேயிடம், “நறுமணப் பிசின், ஒனிக்கா, கல்பான், சுத்தமான சாம்பிராணி ஆகிய வாசனைப் பொருள்களைச்+ சரிசமமாக எடுத்துக்கொள். 35 அதையெல்லாம் பக்குவமாகக் கலக்கி, உப்பு சேர்த்து+ தூபப்பொருளாகத்+ தயாரி. அது தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும். 36 நீ அதிலிருந்து கொஞ்சம் எடுத்து நன்றாகப் பொடியாக்கி, நான் உனக்குமுன் தோன்றும் சந்திப்புக் கூடாரத்திலுள்ள சாட்சிப் பெட்டியின் எதிரே வை. அது உங்களுக்கு மகா பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.

  • வெளிப்படுத்துதல் 5:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அவர் அந்தச் சுருளை வாங்கியபோது, நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும்+ ஆட்டுக்குட்டியானவருக்கு முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் யாழையும், தூபப்பொருள் நிறைந்த தங்கக் கிண்ணங்களையும் வைத்திருந்தார்கள். அந்தத் தூபப்பொருள் பரிசுத்தவான்களின் ஜெபங்களைக் குறிக்கிறது.+

  • வெளிப்படுத்துதல் 8:3-5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இன்னொரு தேவதூதர் பலிபீடத்தின்+ பக்கத்தில் வந்து நின்றார்; அவருடைய கையில் தங்கத் தூபக்கிண்ணம் இருந்தது; பரிசுத்தவான்கள் எல்லாருடைய ஜெபங்களும் கேட்கப்பட்ட நேரத்தில், சிம்மாசனத்துக்கு முன்பாக இருந்த தங்கப் பீடத்தில்+ போடுவதற்குப் பெருமளவு தூபப்பொருள்+ அவரிடம் கொடுக்கப்பட்டது. 4 தேவதூதரின் கையிலிருந்து தூபப்பொருளின் புகை பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு+ சேர்ந்து கடவுளிடம் மேலே போனது. 5 உடனடியாக, தேவதூதர் பலிபீடத்திலிருந்து கொஞ்சம் நெருப்பை எடுத்து தூபக்கிண்ணத்தில் நிரப்பி அதைப் பூமியில் கொட்டினார். அப்போது, இடிமுழக்கங்களும் குரல்களும் மின்னல்களும்+ நிலநடுக்கமும் வந்தன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்