உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 10:45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 ஏனென்றால், மனிதகுமாரனும் மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும்+ பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்குமே வந்தார்”+ என்று சொன்னார்.

  • எபிரெயர் 2:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதற்குப் பதிலாக, இயேசு பாடுகள் பட்டு இறந்ததால்+ அவருக்கு மகிமையும் மாண்பும் கிரீடமாகச் சூட்டப்பட்டிருப்பதைத்தான் பார்க்கிறோம். அவர் கடவுளுடைய அளவற்ற கருணையால் எல்லாருக்காகவும் மரணமடையும்படி+ தேவதூதர்களைவிட கொஞ்சம் தாழ்த்தப்பட்டிருந்தார்.+

  • எபிரெயர் 7:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அதனால், மற்ற தலைமைக் குருமார்களைப் போல், முதலில் தன்னுடைய பாவங்களுக்காகவும் பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும்+ அவர் தினமும் பலி கொடுக்க வேண்டியதில்லை.+ ஏனென்றால், அவர் எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகத் தன்னையே பலியாகக் கொடுத்துவிட்டார்.+

  • எபிரெயர் 9:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஆனால், இரண்டாவது அறைக்குள் தலைமைக் குரு மட்டும்தான் வருஷத்துக்கு ஒருமுறை+ இரத்தத்தை எடுத்துக்கொண்டு போய்,+ தனக்காகவும்+ மக்கள் தெரியாமல் செய்த பாவங்களுக்காகவும்+ செலுத்துவார்.

  • எபிரெயர் 9:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 வெள்ளாடுகள், இளம் காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு போகவில்லை. அதற்குப் பதிலாக, தன்னுடைய சொந்த இரத்தத்தை+ எடுத்துக்கொண்டு எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக மகா பரிசுத்த அறைக்குள் போய், நமக்காக நிரந்தர விடுதலை* வாங்கித் தந்திருக்கிறார்.+

  • வெளிப்படுத்துதல் 1:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைப்பதாக. இவர்தான் “நம்பகமான சாட்சி,”+ “முதன்முதலில் உயிர்த்தெழுப்பப்பட்டவர்,”+ “பூமியின் ராஜாக்களுக்குத் தலைவர்.”+

      நம்மேல் அன்பு வைத்திருக்கிற இவர்+ தன்னுடைய இரத்தத்தால் பாவங்களிலிருந்து நம்மை விடுதலை செய்து,+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்