-
எபிரெயர் 9:24-26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 அதனால்தான் கிறிஸ்து, நிஜத்தின் சாயலாகவும்+ கையால் செய்யப்பட்டதாகவும் இருக்கிற மகா பரிசுத்த அறைக்குள் போகாமல்,+ கடவுளுக்கு* முன்னால் இப்போது நமக்காகத் தோன்றும்படி+ பரலோகத்துக்குள் போயிருக்கிறார்.+ 25 தலைமைக் குரு வருஷா வருஷம் மகா பரிசுத்த அறைக்குள் போய் மிருக இரத்தத்தைக் கொடுத்தது போல,+ கிறிஸ்து தன்னையே திரும்பத் திரும்பப் பலி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. 26 அப்படி அவசியம் இருந்திருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் பல தடவை பாடுகள் பட வேண்டியிருந்திருக்கும். ஆனால், பாவங்களைப் போக்க அவர் தன்னையே பலி கொடுப்பதற்காக இந்தச் சகாப்தத்தின்* கடைசிக் கட்டத்தில் ஒரே தடவை வெளிப்பட்டிருக்கிறார்.+
-
-
1 யோவான் 2:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 சின்னப் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்காக இந்த விஷயங்களை நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஆனாலும், நம்மில் யாராவது ஏதாவது பாவம் செய்துவிட்டால், பரலோகத் தகப்பனோடு இருக்கிற நீதியுள்ளவரான+ இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக* இருப்பார்.+ 2 நம்முடைய பாவங்களுக்குப்+ பிராயச்சித்த பலி*+ அவர்தான்; நம்முடைய பாவங்களுக்கு மட்டுமல்ல, முழு உலகத்தின் பாவங்களுக்கும் பிராயச்சித்த பலி அவர்தான்.+
-