உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 15:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில், உங்கள் சகோதரன் ஒருவன் ஏழையாகிவிட்டால் அவனிடம் கல்நெஞ்சத்தோடு நடந்துகொள்ளாதீர்கள். அந்த ஏழை சகோதரனிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.+

  • சங்கீதம் 41:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 ஏழைக்கு* கரிசனையோடு உதவுகிறவன் சந்தோஷமானவன்.+

      ஆபத்து நாளில் யெகோவா அவனைக் காப்பாற்றுவார்.

  • சங்கீதம் 112:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 தாராளமாக* கடன் கொடுக்கிறவனுக்கு எந்தக் குறையும் வராது.+

      י [யோத்]

      அவன் எல்லாவற்றையுமே நியாயமாகச் செய்கிறான்.

  • நீதிமொழிகள் 3:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 நல்லது செய்ய வேண்டியவர்களுக்கு* நீ அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.+

      அதுவும், உதவி செய்ய சக்தி இருக்கும்போது அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.+

  • நீதிமொழிகள் 19:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான்.+

      அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்.*+

  • மாற்கு 14:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஏனென்றால், ஏழைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறார்கள்,+ நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நல்லது செய்யலாம்; ஆனால், நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை.+

  • அப்போஸ்தலர் 11:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அப்போது, சீஷர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை+ யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்குச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.+

  • 1 தீமோத்தேயு 6:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அதோடு, நன்மை செய்கிறவர்களாகவும், நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களாகவும், தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்.

  • 1 யோவான் 3:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆனால், இந்த உலகத்தில் பொருள் வசதிகள் உள்ளவன் தன்னுடைய சகோதரன் வறுமையில் வாடுவதைப் பார்த்தும், அவன்மேல் கரிசனை காட்ட மறுத்தால் கடவுள்மேல் அவனுக்கு அன்பு இருக்கிறதென்று எப்படிச் சொல்ல முடியும்?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்