7 அதன்பின், ஒப்பந்தப் புத்தகத்தை* எடுத்து அதை ஜனங்களுக்கு முன்னால் சத்தமாகப் படித்தார்.+ அப்போது அவர்கள், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம், அவருடைய பேச்சைக் கேட்டு நடப்போம்”+ என்றார்கள்.
16 யெகோவா மோசேயிடம், “நீ இறக்கப்போகிறாய். இந்த ஜனங்கள், நான் கொடுக்கப்போகிற தேசத்திலுள்ள தெய்வங்களை வணங்கி எனக்குத் துரோகம் செய்வார்கள்.+ என்னைவிட்டு விலகி,+ நான் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை மீறுவார்கள்.+
9 ‘அவர்களுடைய முன்னோர்களை நான் எகிப்திலிருந்து கைப்பிடித்து நடத்திக்கொண்டு வந்தபோது+ செய்த ஒப்பந்தத்தைப் போல அது இருக்காது. ஏனென்றால், அந்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் தொடர்ந்து நடக்கவில்லை. அதனால், அவர்கள்மேல் அக்கறை காட்டுவதையே நான் விட்டுவிட்டேன்’ என்றும் யெகோவா* சொல்கிறார்.