24 “ஆரோன் இறந்துபோவான்.*+ இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுக்கப்போகிற தேசத்துக்குள் அவன் போக மாட்டான். மேரிபாவின் தண்ணீர் விஷயத்தில் நீங்கள் இரண்டு பேரும் என் கட்டளையை மீறிவிட்டீர்கள்.+
28 அங்கு ஆரோனுடைய குருத்துவ அங்கிகளைக் கழற்றி அவருடைய மகன் எலெயாசாருக்கு மோசே போட்டுவிட்டார். அதன்பின், அந்த மலை உச்சியில் ஆரோன் இறந்துபோனார்.+ பின்பு, மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கி வந்தார்கள்.
38 யெகோவாவின் கட்டளைப்படி, குருவாகிய ஆரோன் ஓர் என்ற அந்த மலைமேல் ஏறிப் போனார். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட 40-ஆம் வருஷம், ஐந்தாம் மாதம், முதல் நாளில் அவர் அங்கே இறந்தார்.+
6 பிற்பாடு, இஸ்ரவேலர்கள் பேரோத் பெனெ-யாக்கானிலிருந்து புறப்பட்டு மோசெராவுக்குப் போனார்கள். அங்கே ஆரோன் இறந்துபோனார், அங்குதான் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருடைய மகன் எலெயாசார் அவருக்குப் பதிலாகக் குருத்துவச் சேவை செய்யத் தொடங்கினான்.+