உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 22:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதனால், மோவாப் தேசத்துப் பெரியோர்களும் மீதியான் தேசத்துப் பெரியோர்களும், சபிப்பதற்கான* கூலியை எடுத்துக்கொண்டு பிலேயாமிடம்+ போனார்கள். பாலாக் சொல்லி அனுப்பிய செய்தியை அவனிடம் சொன்னார்கள்.

  • எண்ணாகமம் 25:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 இஸ்ரவேலர்கள் சித்தீமில்+ குடியிருந்த சமயத்தில், மோவாபியப் பெண்களுடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.+ 2 அந்தப் பெண்கள் அவர்களிடம், ‘எங்களுடைய தெய்வங்களுக்குப் பலி செலுத்துகிறோம், நீங்களும் வாருங்கள்’ என்று சொல்லிக் கூப்பிட்டார்கள்.+ அவர்களும் போய் அந்தத் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிட்டு, அவற்றைக் கும்பிட்டார்கள்.+ 3 இப்படி, பாகால் பேயோரின் வணக்கத்தில் இஸ்ரவேலர்கள் கலந்துகொண்டார்கள்.+ அதனால், அவர்கள்மேல் யெகோவாவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

  • எண்ணாகமம் 25:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 “மீதியானியர்களுக்கு விரோதமாகப் போய், அவர்களைக் கொன்றுபோடுங்கள்.+ 18 ஏனென்றால் பேயோரின் விஷயத்திலும்,+ பேயோரில் கொள்ளைநோய் பரவிய நாளில் கொலை செய்யப்பட்ட+ அவர்களுடைய சகோதரியான மீதியானியத் தலைவனின் மகள் கஸ்பியின்+ விஷயத்திலும் அவர்கள் உங்களுக்கு விரோதமாகத் தந்திரமாக நடந்துகொண்டார்கள்” என்றார்.

  • 1 கொரிந்தியர் 10:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அவர்களில் சிலர் பாலியல் முறைகேட்டில்* ஈடுபட்டதால் ஒரே நாளில் 23,000 பேர் செத்துப்போனார்கள்; அவர்களைப் போல் நாமும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடாமல் இருப்போமாக.+

  • வெளிப்படுத்துதல் 2:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஆனாலும், உன்னிடம் சில குறைகள் இருக்கின்றன. பிலேயாமின் போதனைகளைப் பின்பற்றுகிறவர்கள்+ உன் மத்தியில் இருக்கிறார்கள். இந்த பிலேயாம், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்ய வைப்பதற்கு, அதாவது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைச் சாப்பிடவும் பாலியல் முறைகேட்டில்*+ ஈடுபடவும் வைப்பதற்கு, பாலாக்+ என்பவனுக்குக் கற்றுக்கொடுத்தவன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்