-
எண்ணாகமம் 4:31-33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 மெராரியர்கள் சுமக்க வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவைதான்:+ வழிபாட்டுக் கூடாரத்தின் சட்டங்கள்,+ கம்புகள்,+ தூண்கள்,+ பாதங்கள்,+ 32 பிரகாரத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள்,+ அவற்றின் பாதங்கள்,+ கூடார ஆணிகள்,+ கூடாரக் கயிறுகள், மற்றும் வேறு சில கருவிகள். அதனுடன் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டும். யார் யார் எதை எதைச் சுமந்துகொண்டு போக வேண்டுமென்று நீங்கள் சொல்ல வேண்டும். 33 இதுதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக மெராரியர்கள்+ செய்ய வேண்டிய வேலை. குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின் தலைமையில் அவர்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்”+ என்றார்.
-