உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 17:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அப்போது மோசே யோசுவாவிடம்,+ “நம்முடைய ஆட்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு போய் அமலேக்கியர்களுடன் போர் செய். நாளைக்கு நான் உண்மைக் கடவுளின் கோலைக் கையில் பிடித்துக்கொண்டு குன்றின் உச்சியில் நிற்பேன்” என்றார்.

  • யாத்திராகமம் 24:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதனால், மோசேயும் அவருடைய உதவியாளரான யோசுவாவும் புறப்பட்டார்கள்.+ மோசே உண்மைக் கடவுளின் மலைமேல் ஏறிப் போவதற்கு+ முன்பு,

  • யாத்திராகமம் 33:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசுவதுபோல் யெகோவா மோசேயிடம் நேருக்கு நேராகப் பேசுவார்.+ மோசே முகாமுக்குத் திரும்பிப்போன பிறகு, அவருடைய உதவியாளரும் ஊழியரும் நூனின் மகனுமாகிய யோசுவா,+ சந்திப்புக் கூடாரத்திலேயே இருப்பார்.

  • எண்ணாகமம் 27:18-20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அதனால் யெகோவா மோசேயிடம், “அதற்குத் தகுந்த குணமுள்ளவன் நூனின் மகனாகிய யோசுவாதான். அவனைக் கூப்பிட்டு, அவன்மேல் உன் கையை வை.+ 19 பின்பு, குருவாகிய எலெயாசாருக்கும் ஜனங்கள் எல்லாருக்கும் முன்பாக அவனை நிற்க வைத்து, அவர்களுடைய கண் முன்னால் அவனைத் தலைவனாக நியமி.+ 20 உனக்கு இருக்கிற அதிகாரத்தில் கொஞ்சத்தை அவனுக்குக் கொடு.+ அப்போதுதான், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் அவன் பேச்சைக் கேட்பார்கள்.+

  • உபாகமம் 31:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உங்கள்முன் யோர்தானைக் கடந்துபோவார். அவர்தான் மற்ற தேசத்து ஜனங்களை உங்கள் கண் முன்னால் அழிப்பார், நீங்கள் அவர்களை விரட்டியடிப்பீர்கள்.+ யெகோவா சொன்னபடியே, யோசுவாவின் தலைமையில் நீங்கள் யோர்தானைக் கடந்துபோவீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்