32 இப்படியெல்லாம் நடந்தும், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் விசுவாசம் வைக்கவில்லை.+ 33 நீங்கள் முகாம்போட வேண்டிய இடத்தைப் பார்த்துச் சொல்வதற்காக அவர் உங்களுக்கு முன்னால் போனாரே. ராத்திரியில் நெருப்பின் மூலமாகவும் பகலில் மேகத்தின் மூலமாகவும் உங்களுக்கு வழிகாட்டினாரே.+