உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 24:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதன்பின், ஒப்பந்தப் புத்தகத்தை* எடுத்து அதை ஜனங்களுக்கு முன்னால் சத்தமாகப் படித்தார்.+ அப்போது அவர்கள், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம், அவருடைய பேச்சைக் கேட்டு நடப்போம்”+ என்றார்கள்.

  • உபாகமம் 8:12-14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நீங்கள் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருக்கும்போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருக்கும்போதும்,+ 13 உங்கள் ஆடுமாடுகள் ஏராளமாகப் பெருகும்போதும், வெள்ளியும் தங்கமும் உங்களிடம் குவியும்போதும், எல்லாமே உங்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும்போதும், 14 உங்கள் உள்ளத்தில் பெருமை வந்துவிடக் கூடாது.+ எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்துவிடக் கூடாது.+

  • உபாகமம் 29:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 யெகோவா இஸ்ரவேலர்களுடன் ஓரேபில் செய்த ஒப்பந்தத்தைத்+ தவிர, மோவாப் தேசத்தில் இன்னொரு ஒப்பந்தத்தையும் செய்யும்படி மோசேயிடம் கட்டளை கொடுத்தார். அந்த ஒப்பந்தத்தின் வார்த்தைகள் இவைதான்.

  • நெகேமியா 9:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 நீங்கள் இவ்வளவு செய்தும், உங்கள் பேச்சைக் கேட்காமல் உங்களுடைய திருச்சட்டத்தை மீறினார்கள்.*+ உங்களிடம் திருந்தி வரும்படி எச்சரித்த உங்களுடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். உங்களைத் துளியும் மதிக்காமல் அக்கிரமம் செய்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்