21 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்திலிருந்து யெகோவா உங்களை அடியோடு அழிக்கும்வரை நோயால் உங்களைத் தாக்குவார்.+ 22 காசநோய், கடுமையான காய்ச்சல்,+ வீக்கம், கடுமையான சூடு, போர்,+ வெப்பக்காற்று, தாவர நோய்+ ஆகியவற்றால் யெகோவா தாக்குவார். நீங்கள் அழியும்வரை அவை உங்களைவிட்டுப் போகாது.