-
1 ராஜாக்கள் 10:4-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 எல்லா விஷயங்களிலும் சாலொமோனுக்கு இருந்த ஞானம்,+ அவர் கட்டிய அரண்மனை,+ 5 மேஜையில் பரிமாறப்பட்ட உணவு,+ ஊழியர்கள் உட்கார்ந்திருந்த வரிசை, உணவு பரிமாறப்பட்ட விதம், பரிமாறுகிறவர்களின் உடை, பானம் பரிமாறுகிற ஆட்கள், யெகோவாவின் ஆலயத்தில் அவர் வழக்கமாகச் செலுத்திய தகன பலிகள் ஆகியவற்றைப் பார்த்து சேபா தேசத்து ராணி வாயடைத்துப்போனாள்.* 6 அதனால் ராஜாவிடம், “உங்களுடைய சாதனைகளையும்* ஞானத்தையும் பற்றி எங்கள் தேசத்தில் நான் கேள்விப்பட்டது அத்தனையும் உண்மை. 7 ஆனால், நேரில் வந்து பார்க்கும்வரை அதையெல்லாம் நான் நம்பவே இல்லை. அதில் பாதியைக்கூட நான் கேள்விப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உங்களுடைய ஞானமும் செல்வச்செழிப்பும் நான் கேள்விப்பட்டதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
-
-
தானியேல் 1:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அவர்களிடம் ராஜா பேசிப் பார்த்தபோது, தானியேலும் அனனியாவும் மீஷாவேலும் அசரியாவும்+ மற்ற எல்லா இளைஞர்களையும்விட சிறந்தவர்களாக இருந்ததைக் கண்டான். அதனால், அரண்மனையில் சேவை செய்ய அவர்களை நியமித்தான். 20 ஞானமும் புத்தியும்* தேவைப்படுகிற எந்தவொரு விஷயத்தைப் பற்றி ராஜா கேட்டபோதும் அவர்கள் சிறப்பாகப் பதில் சொன்னார்கள். தன்னுடைய சாம்ராஜ்யத்திலிருந்த மந்திரவாதிகள், மாயவித்தைக்காரர்கள்+ எல்லாரையும்விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாக இருந்ததை ராஜா தெரிந்துகொண்டான்.
-