உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 18:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 சந்திப்புக் கூடாரத்தில் லேவியின் வம்சத்தார் செய்கிற சேவைக்காக, இஸ்ரவேலர்களுக்கு இருக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை அவர்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன்.+

  • உபாகமம் 14:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களுக்கு உங்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாததால்+ அவர்களை அசட்டை செய்யாதீர்கள்.+

  • 2 நாளாகமம் 31:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதோடு, குருமார்களும் லேவியர்களும் யெகோவாவின் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பதற்கு உதவியாக* அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பங்கைக் கொடுக்கச் சொல்லி எருசலேமில் குடியிருந்த மக்களுக்குக் கட்டளையிட்டார்.+

  • நெகேமியா 10:38, 39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 லேவியர்கள் பத்திலொரு பாகத்தைச் சேகரிக்கும்போது ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த குருமார்கள் அவர்களோடு இருப்பார்கள். லேவியர்கள் அந்தப் பத்திலொரு பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை எடுத்து கடவுளுடைய ஆலயத்தின்+ சேமிப்பு* அறைகளில் வைப்பார்கள். 39 தானியம், புதிய திராட்சமது, எண்ணெய்+ ஆகிய காணிக்கைகளை+ இஸ்ரவேலர்களும் லேவியர்களும் அங்கு கொண்டுவருவார்கள். அந்த அறைகளில்தான் ஆலயப் பாத்திரங்கள் வைக்கப்படும். சேவை செய்கிற குருமார்களும் வாயிற்காவலர்களும் பாடகர்களும் அங்குதான் தங்குவார்கள். நாங்கள் எங்களுடைய கடவுளுடைய ஆலயத்தை அலட்சியப்படுத்த மாட்டோம்”+ என்று சொன்னார்கள்.

  • மல்கியா 3:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 “ஒரு சாதாரண மனுஷன் கடவுளிடம் திருட* முடியுமா? ஆனால், நீங்கள் என்னிடம் திருடுகிறீர்கள்.”

      ஆனால், “நாங்கள் எப்படி உங்களிடம் திருடுகிறோம்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

      “பத்திலொரு பாகத்தையும்* காணிக்கைகளையும் எனக்குக் கொடுக்காமல் வைத்துக்கொள்கிறீர்களே!

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்