-
நெகேமியா 10:37பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
37 எங்களுடைய முதல் விளைச்சலின் முதல் மாவு,*+ காணிக்கைகள், எல்லா வகையான மரங்களின் பழங்கள்,+ புதிய திராட்சமது, எண்ணெய்+ ஆகியவற்றை எங்கள் கடவுளுடைய ஆலயத்தின் சேமிப்பு* அறைகளுக்கு+ எடுத்து வருவோம். அதுமட்டுமல்லாமல், எங்களுடைய எல்லா வேளாண்மை நகரங்களிலிருந்தும் பத்திலொரு பாகத்தைச் சேகரிக்கிற லேவியர்களுக்காக+ எங்களுடைய நிலத்தின் விளைச்சலிலிருந்து பத்திலொரு பாகத்தைக் கொண்டுவருவோம்.
-
-
நெகேமியா 12:44பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
44 காணிக்கைகளும்,+ முதல் விளைச்சலும்,+ பத்திலொரு பாகமும்+ வைக்கப்படுகிற சேமிப்பு அறைகளைக்+ கவனிக்க அன்று ஆண்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள், திருச்சட்டத்தின்படி குருமார்களுக்கும் லேவியர்களுக்கும்+ நகரங்களின் வயல்களிலிருந்து வந்து சேர வேண்டிய பங்குகளைச்+ சேகரித்து, அங்கே வைக்க வேண்டியிருந்தது. குருமார்களும் லேவியர்களும் சேவை செய்வதைப் பார்த்து யூதா ஜனங்கள் எல்லாரும் சந்தோஷத்தோடு அவற்றைக் கொடுத்தார்கள்.
-
-
எபிரெயர் 7:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 உண்மைதான், குருத்துவப் பொறுப்பு கொடுக்கப்படுகிற லேவியின் மகன்கள்+ இஸ்ரவேல் மக்களிடமிருந்து, அதாவது தங்கள் சகோதரர்களிடமிருந்து, பத்திலொரு பாகத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற கட்டளை திருச்சட்டத்தில் இருக்கிறது.+ இஸ்ரவேல் மக்கள் ஆபிரகாமின் வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறபோதிலும் அந்தக் கட்டளையின்படி லேவியின் மகன்கள் அதை வாங்கிக்கொள்கிறார்கள்.
-