-
எண்ணாகமம் 18:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 “நீ லேவியர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘இஸ்ரவேலர்கள் கொடுக்கும் பத்திலொரு பாகம் உங்களுக்குக் கிடைக்கும். அதை நான் அவர்களிடமிருந்து வாங்கி உங்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன்.+ நீங்கள் அந்தப் பத்திலொரு பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை எடுத்து யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.+
-
-
மல்கியா 3:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 என்னுடைய ஆலயத்தில் எப்போதும் உணவு இருப்பதற்காக, நீங்கள் கொடுக்க வேண்டிய பத்திலொரு பாகம்* முழுவதையும் அங்குள்ள சேமிப்பு அறைக்குக் கொண்டுவாருங்கள்.+ அப்போது, நான் வானத்தின் கதவுகளைத் திறந்து அளவில்லாத* ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிகிறேனா* இல்லையா என்று தயவுசெய்து என்னைச் சோதித்துப் பாருங்கள்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
-
-
லூக்கா 11:42பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
42 பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், நீங்கள் புதினாவிலும் சதாப்புவிலும்* மற்ற எல்லா புல்பூண்டுகளிலும் பத்திலொரு பாகத்தைக் கொடுக்கிறீர்கள்.+ ஆனால், நியாயத்தையும் கடவுள்மேல் காட்ட வேண்டிய அன்பையும் ஒதுக்கித்தள்ளுகிறீர்கள். இவற்றை நீங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடித்திருக்க வேண்டும், அவற்றையும் விட்டுவிடாமல் இருந்திருக்க வேண்டும்.+
-
-
எபிரெயர் 7:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 உண்மைதான், குருத்துவப் பொறுப்பு கொடுக்கப்படுகிற லேவியின் மகன்கள்+ இஸ்ரவேல் மக்களிடமிருந்து, அதாவது தங்கள் சகோதரர்களிடமிருந்து, பத்திலொரு பாகத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற கட்டளை திருச்சட்டத்தில் இருக்கிறது.+ இஸ்ரவேல் மக்கள் ஆபிரகாமின் வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறபோதிலும் அந்தக் கட்டளையின்படி லேவியின் மகன்கள் அதை வாங்கிக்கொள்கிறார்கள்.
-