18 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் கூட்டிக்கொண்டு போகிற தேசத்துக்கு நீங்கள் வந்தபின், 19 அந்தத் தேசத்தில் விளைவதை நீங்கள் சாப்பிடும்போது,+ யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்த வேண்டும்.
2 உங்கள் கடவுளாகிய யெகோவா தரும் தேசத்தின் முதல் விளைச்சல் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சத்தை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு, உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு அதைக் கொண்டுபோக வேண்டும்.+