உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 15:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நீங்கள் அவனுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும்,+ வேண்டாவெறுப்போடு கொடுக்கக் கூடாது. அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.+

  • சங்கீதம் 41:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 ஏழைக்கு* கரிசனையோடு உதவுகிறவன் சந்தோஷமானவன்.+

      ஆபத்து நாளில் யெகோவா அவனைக் காப்பாற்றுவார்.

  • நீதிமொழிகள் 11:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 தாராளமாகக் கொடுக்கிறவன்* ஏராளமாகப் பெறுகிறான்.+

      கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் காட்டுகிறவன் ஏழையாகிறான்.+

  • நீதிமொழிகள் 19:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான்.+

      அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்.*+

  • மல்கியா 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 என்னுடைய ஆலயத்தில் எப்போதும் உணவு இருப்பதற்காக, நீங்கள் கொடுக்க வேண்டிய பத்திலொரு பாகம்* முழுவதையும் அங்குள்ள சேமிப்பு அறைக்குக் கொண்டுவாருங்கள்.+ அப்போது, நான் வானத்தின் கதவுகளைத் திறந்து அளவில்லாத* ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிகிறேனா* இல்லையா என்று தயவுசெய்து என்னைச் சோதித்துப் பாருங்கள்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

  • லூக்கா 6:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், அவர்களுக்கு நல்லது செய்யுங்கள், எதையும் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்.+ அப்போது, உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும், உன்னதமான கடவுளுடைய பிள்ளைகளாகவும் இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நன்றிகெட்டவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும்கூட கருணை காட்டுகிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்