உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 14:39-45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 மோசே இவற்றை இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் சொன்னபோது, அவர்கள் மிகவும் அழுது புலம்ப ஆரம்பித்தார்கள். 40 பின்பு விடியற்காலையில் எழுந்து, “நாங்கள் பாவம் செய்துவிட்டோம், யெகோவா சொல்லியிருந்த இடத்துக்குப் போக இப்போது தயாராக இருக்கிறோம்” என்று சொல்லிக்கொண்டு உயரமான மலைப்பகுதிக்குப் போகப் பார்த்தார்கள்.+ 41 ஆனால் மோசே அவர்களிடம், “நீங்கள் ஏன் யெகோவாவின் கட்டளையை மீறி நடக்கிறீர்கள்? நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்காது. 42 அதனால் போகாதீர்கள், யெகோவா உங்களோடு இல்லை, மீறிப் போனால் எதிரிகள் உங்களை வீழ்த்திவிடுவார்கள்.+ 43 அங்கே அமலேக்கியர்களும் கானானியர்களும் இருக்கிறார்கள்.+ நீங்கள் வாளால் கொல்லப்படுவீர்கள். நீங்கள் யெகோவாவிடமிருந்து விலகிவிட்டதால் யெகோவா உங்களோடு இருக்க மாட்டார்”+ என்றார்.

      44 அவர்கள் மோசேயின் பேச்சைக் கேட்காமல் அகங்காரத்தோடு* அந்த மலைப்பகுதிக்குப் போனார்கள்.+ ஆனால், யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியும் மோசேயும் முகாமிலிருந்து போகவில்லை.+ 45 அப்போது அந்த மலைப்பகுதியில் குடியிருந்த அமலேக்கியர்களும் கானானியர்களும் இறங்கிவந்து அவர்களைத் தாக்கி, ஓர்மாவரை துரத்திக்கொண்டு போனார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்