4 நீ கடவுளிடம் எதையாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்றத் தாமதிக்காதே.+ ஏனென்றால், நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாத முட்டாள்களைக் கடவுளுக்குப் பிடிக்காது.+ நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று.+
6 உன் வாயினால் பாவம் செய்யாதபடி பார்த்துக்கொள்.+ தெரியாமல் சொல்லிவிட்டதாகத்+ தேவதூதர் முன்னால் சொல்லாதே. நீ சொன்னதைக் கேட்டு உண்மைக் கடவுள் ஏன் கோபப்பட்டு, உன் கைகளின் வேலையை அழிக்க வேண்டும்?+