9 நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.+ உங்களுக்கு ஏராளமான பிள்ளைகளையும் மந்தைகளையும் விளைச்சலையும் தருவார். யெகோவா உங்கள் முன்னோர்களை ஆசீர்வதிப்பதில் சந்தோஷப்பட்டது போலவே உங்களை ஆசீர்வதிப்பதிலும் சந்தோஷப்படுவார்.+