-
ஆதியாகமம் 15:18-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து,+ “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை*+ இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன்.+ 19 கேனியர்களும்,+ கெனிசியர்களும், கத்மோனியர்களும், 20 ஏத்தியர்களும்,+ பெரிசியர்களும்,+ ரெப்பாயீமியர்களும்,+ 21 எமோரியர்களும், கானானியர்களும், கிர்காசியர்களும், எபூசியர்களும்+ வாழ்கிற அந்தத் தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொன்னார்.
-
-
உபாகமம் 7:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 பின்பு அவர், “நீங்கள் சொந்தமாக்கப்போகும் தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை இப்போது கூட்டிக்கொண்டு போகும்போது,+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும்+ இருக்கிற ஏழு தேசங்களை உங்கள் கண் முன்னால் துரத்தியடிப்பார்.+ அதாவது ஏத்தியர்கள், கிர்காசியர்கள், எமோரியர்கள்,+ கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களைத் துரத்தியடிப்பார்.
-