31 உங்கள் எல்லை செங்கடலிலிருந்து பெலிஸ்தியர்களின் கடல்* வரைக்கும், வனாந்தரத்திலிருந்து ஆறு* வரைக்கும் இருக்கும்.+ அங்கிருக்கிற ஜனங்களை உங்கள் கையில் கொடுப்பேன், அவர்களை நீங்கள் துரத்தியடிப்பீர்கள்.+
44 அதோடு, அவர்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே, தேசமெங்கும் அவர்களுக்கு யெகோவா அமைதி தந்தார்.+ எந்த எதிரியினாலும் அவர்களை எதிர்க்க முடியவில்லை.+ எல்லா எதிரிகளையும் அவர்களுடைய கையில் யெகோவா கொடுத்தார்.+