24 அவர்களுடைய ராஜாக்களை உங்கள் கையில் கொடுப்பார்,+ நீங்கள் அவர்களுடைய பெயர்களை இந்த மண்ணிலிருந்தே மறைந்துபோகச் செய்வீர்கள்.+ நீங்கள் அவர்களை அடியோடு அழிக்கும்வரை+ யாருமே உங்களை எதிர்த்து நிற்க முடியாது.+
3 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உங்கள்முன் யோர்தானைக் கடந்துபோவார். அவர்தான் மற்ற தேசத்து ஜனங்களை உங்கள் கண் முன்னால் அழிப்பார், நீங்கள் அவர்களை விரட்டியடிப்பீர்கள்.+ யெகோவா சொன்னபடியே, யோசுவாவின் தலைமையில் நீங்கள் யோர்தானைக் கடந்துபோவீர்கள்.+