27 கடைசியில், யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கு இருந்த மம்ரே என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்.+ இது கீரியாத்-அர்பாவில், அதாவது எப்ரோனில், இருந்தது. முன்பு ஆபிரகாமும் ஈசாக்கும் எப்ரோனில்தான் அன்னியர்களாகக் குடியிருந்தார்கள்.+
7 அவர் சொன்னபடியே அவர்கள் செய்தார்கள். நப்தலி மலைப்பகுதியில் உள்ள கலிலேயாவைச் சேர்ந்த கேதேஸ்,+ எப்பிராயீம் மலைப்பகுதியில் உள்ள சீகேம்,+ யூதா மலைப்பகுதியில் உள்ள கீரியாத்-அர்பா,+ அதாவது எப்ரோன், ஆகிய நகரங்களைத் தனியாக* பிரித்து வைத்தார்கள்.
11 யூதா மலைப்பகுதியிலுள்ள கீரியாத்-அர்பாவும்+ (அர்பா என்பவன் ஏனாக்கின் தகப்பன்), அதாவது எப்ரோனும்,+ அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. 12 ஆனால், அந்த நகரத்தைச் சேர்ந்த காட்டுவெளிகளும் அதன் கிராமங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குச் சொத்தாகக் கொடுக்கப்பட்டன.+