27 கடைசியில், யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கு இருந்த மம்ரே என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்.+ இது கீரியாத்-அர்பாவில், அதாவது எப்ரோனில், இருந்தது. முன்பு ஆபிரகாமும் ஈசாக்கும் எப்ரோனில்தான் அன்னியர்களாகக் குடியிருந்தார்கள்.+
22 அவர்கள் நெகேபுக்குப் போய் எப்ரோன் நகரத்துக்கு+ வந்துசேர்ந்தார்கள். அங்கே ஏனாக்கியர்களான+ அகீமானும் சேசாயும் தல்மாயும்+ வாழ்ந்துவந்தார்கள். அந்த எப்ரோன் நகரம், எகிப்திலுள்ள சோவான் நகரம் கட்டப்படுவதற்கு ஏழு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.