-
1 ராஜாக்கள் 18:26, 27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 அதனால், அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த இளம் காளையைப் பலிகொடுக்கத் தயார் செய்தார்கள். பின்பு காலையிலிருந்து மத்தியானம்வரை, “பாகாலே! பதில் தா” என்று வேண்டிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் எந்தச் சத்தமும் வரவில்லை, யாரும் பதில் தரவுமில்லை.+ தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி அவர்கள் குதித்துக் குதித்து ஆடினார்கள். 27 மத்தியானத்தில் எலியா அவர்களைப் பார்த்து, “தொண்டை கிழிய கத்துங்கள்! அவன் ஒரு கடவுள்தானே!+ ஏதாவது ஆழ்ந்த யோசனையில் இருப்பான். இல்லை, கழிப்பிடத்துக்குப் போயிருப்பான்,* ஒருவேளை தூங்கினாலும் தூங்கியிருப்பான். யாராவது அவனை எழுப்பினால்தான் உண்டு!” என்று கேலி செய்தார்.
-
-
சங்கீதம் 115:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அவற்றுக்கு வாய் இருக்கிறது, ஆனால் பேச முடியாது.+
கண்கள் இருக்கின்றன, ஆனால் பார்க்க முடியாது.
-