-
தானியேல் 5:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 பரலோகத்தின் எஜமானுக்கு மேலாக உங்களை உயர்த்தினீர்கள்.+ அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை எடுத்துவரச் சொன்னீர்கள்.+ பின்பு, நீங்களும் உங்கள் மனைவிகளும் மறுமனைவிகளும் முக்கியப் பிரமுகர்களும் ஆலயத்தின் கோப்பைகளில் திராட்சமது குடித்தீர்கள். அதுமட்டுமல்லாமல், எதையும் பார்க்கவோ கேட்கவோ தெரிந்துகொள்ளவோ முடியாத வெள்ளி, தங்கம், செம்பு, இரும்பு, மரம், கல் ஆகியவற்றால் செய்யப்பட்ட தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள்.+ ஆனால், உங்கள் உயிருக்கும் உங்களுடைய எல்லா செயல்களுக்கும் அதிகாரியான கடவுளை+ மகிமைப்படுத்தவில்லை.
-
-
ஆபகூக் 2:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 சிலையைச் செதுக்குகிறவனுக்கு அதனால் என்ன பிரயோஜனம்?
அவன் கையால்தானே அதைச் செதுக்கினான்?
உலோகச் சிலையையும் பொய்யைப் போதிக்கிற சிலையையும்
அவன் நம்பினாலும் அவற்றால் என்ன பிரயோஜனம்?
அவை ஒன்றுக்கும் உதவாத ஊமைத் தெய்வங்கள்தானே?+
19 ஒரு மரத்துண்டைப் பார்த்து, “கடவுளே, கண்திறக்க மாட்டாயா?” என்று கேட்கிறவனுக்கும்,
பேச முடியாத கல்லைப் பார்த்து, “இறைவா, கண் திறந்து எங்களுக்கு நல்ல வழி காட்டு” என்று சொல்கிறவனுக்கும் கேடுதான் வரும்!
-