உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 24:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால் யெகோவாவுக்குப் பயந்து நடங்கள், உத்தமத்தோடும் உண்மையோடும் அவருக்குச் சேவை செய்யுங்கள்.+ ஆற்றுக்கு அந்தப் பக்கத்திலும் எகிப்திலும் உங்கள் முன்னோர்கள் கும்பிட்டுவந்த தெய்வங்களைத் தூக்கியெறிந்துவிட்டு,+ யெகோவாவை வணங்குங்கள்.

  • யோசுவா 24:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அப்போது அவர், “அப்படியானால், உங்கள் நடுவில் இருக்கிற பொய் தெய்வங்களைத் தூக்கிப்போடுங்கள். இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவிடம் முழு இதயத்தோடு திரும்புங்கள்” என்று சொன்னார்.

  • நியாயாதிபதிகள் 2:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யெகோவாவை விட்டுவிட்டு பாகால் சிலைகளையும் அஸ்தரோத் சிலைகளையும் கும்பிட்டார்கள்.+

  • நியாயாதிபதிகள் 3:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள். தங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் பூஜைக் கம்பங்களையும்* கும்பிட்டார்கள்.+

  • நியாயாதிபதிகள் 10:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதன்பின், இஸ்ரவேலர்கள் மறுபடியும் யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்தார்கள்.+ பாகால்களின் சிலைகளையும்+ அஸ்தரோத்தின் சிலைகளையும் அராமின்* தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும்+ அம்மோனியர்களின் தெய்வங்களையும்+ பெலிஸ்தியர்களின் தெய்வங்களையும்+ கும்பிட ஆரம்பித்தார்கள். அவர்கள் யெகோவாவை வணங்காமல் அவரைவிட்டு விலகினார்கள்.

  • 1 ராஜாக்கள் 11:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 என்னுடைய மக்கள் என்னை விட்டுவிட்டு+ சீதோனியர்களின் தேவியாகிய அஸ்தரோத்தையும் மோவாபியர்களின் தெய்வமாகிய கேமோஷையும் அம்மோனியர்களின் தெய்வமாகிய மில்கோமையும் வணங்குகிறார்கள். அவர்கள் என் வழிகளில் நடக்கவில்லை, எனக்குப் பிடித்த காரியங்களைச் செய்யவில்லை. சாலொமோனுடைய அப்பா தாவீதைப் போல் என்னுடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் பின்பற்றவில்லை. அதனால்தான் இப்படிச் செய்யப்போகிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்