உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 3:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவர்கள் யெகோவாவிடம் உதவிக்காகக் கதறியபோது,+ அவர்களைக் காப்பாற்ற+ காலேபின் தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேலை+ யெகோவா அனுப்பினார். 10 யெகோவாவின் சக்தி அவருக்குக் கிடைத்தது,+ அவர் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக ஆனார். அவர் போருக்குப் போனபோது, மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்-ரிஷதாயீமைத் தோற்கடிக்க யெகோவா அவருக்கு உதவினார்.

  • நியாயாதிபதிகள் 6:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 யெகோவாவின் சக்தி கிதியோனுக்குக் கிடைத்ததும்+ அவர் ஊதுகொம்பை ஊதினார்.+ அப்போது, அபியேசரின் வம்சத்தார்+ அவரிடம் திரண்டு வந்தார்கள்.

  • நியாயாதிபதிகள் 11:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 யெப்தாவுக்கு யெகோவாவின் சக்தி கிடைத்தது.+ அவர் கீலேயாத் பிரதேசத்தையும் மனாசே பிரதேசத்தையும் கடந்து கீலேயாத்திலுள்ள மிஸ்பேக்கு வந்தார்.+ பின்பு, அம்மோனியர்களோடு போர் செய்யப் போனார்.

  • நியாயாதிபதிகள் 14:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 சிம்சோன் தன்னுடைய அம்மா அப்பாவோடு திம்னாவுக்குப் புறப்பட்டுப் போனார். அங்கிருந்த திராட்சைத் தோட்டத்துக்கு அவர் போய்ச் சேர்ந்தபோது, ஒரு சிங்கம் கர்ஜித்தபடி அவருக்கு நேராகப் பாய்ந்து வந்தது. 6 அப்போது யெகோவாவின் சக்தியால் அவர் பலம் பெற்று,+ ஓர் ஆட்டுக்குட்டியை இரண்டாகக் கிழிப்பதுபோல் அந்தச் சிங்கத்தை வெறுங்கையால் இரண்டாகக் கிழித்தார். ஆனால், இதைப் பற்றித் தன் அம்மாவிடமோ அப்பாவிடமோ சொல்லவில்லை.

  • 1 சாமுவேல் 10:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சவுலும் அவருடைய வேலைக்காரனும் அந்த மலைக்குப் போனபோது, தீர்க்கதரிசிகள் அவரைச் சந்தித்தார்கள். உடனே, அவருக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தது.+ அவர்களுடன் சேர்ந்து அவர் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தார்.+ 11 அவரைப் பற்றி ஏற்கெனவே தெரிந்தவர்கள், தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து அவர் தீர்க்கதரிசனம் சொல்வதைப் பார்த்தார்கள். அப்போது, “கீசின் மகன் சவுலுக்கு என்ன ஆனது? சவுலும் ஒரு தீர்க்கதரிசியா?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள்.

  • 1 சாமுவேல் 16:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உடனே சாமுவேல், எண்ணெய் நிரப்பிய கொம்பை+ எடுத்து, அவனுடைய சகோதரர்களுக்கு முன்பாக அவனை அபிஷேகம் செய்தார். அந்த நாளிலிருந்து, யெகோவாவின் சக்தியால் தாவீது பலம் பெற்றான்.+ பிறகு, சாமுவேல் ராமாவுக்குப் புறப்பட்டுப் போனார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்