-
எண்ணாகமம் 11:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 அதற்கு யெகோவா மோசேயிடம், “இஸ்ரவேலில் உனக்குத் தெரிந்த பெரியோர்களிலும்* அதிகாரிகளிலும்+ 70 பேரை சந்திப்புக் கூடாரத்துக்குக் கூட்டிக்கொண்டு வா. அங்கே அவர்களை உன்னோடு நிறுத்து. 17 அப்போது, நான் இறங்கி வந்து+ உன்னோடு பேசுவேன்.+ நான் உனக்குக் கொடுத்திருக்கிற சக்தியில்+ கொஞ்சத்தை எடுத்து அவர்கள்மேல் வைப்பேன். ஜனங்களைக் கவனித்துக்கொள்ள அவர்கள் உனக்கு உதவியாக இருப்பார்கள். ஜனங்கள் எல்லாரையும் இனி நீ தனியாகச் சமாளிக்க வேண்டியதில்லை.+
-
-
நியாயாதிபதிகள் 14:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 சிம்சோன் தன்னுடைய அம்மா அப்பாவோடு திம்னாவுக்குப் புறப்பட்டுப் போனார். அங்கிருந்த திராட்சைத் தோட்டத்துக்கு அவர் போய்ச் சேர்ந்தபோது, ஒரு சிங்கம் கர்ஜித்தபடி அவருக்கு நேராகப் பாய்ந்து வந்தது. 6 அப்போது யெகோவாவின் சக்தியால் அவர் பலம் பெற்று,+ ஓர் ஆட்டுக்குட்டியை இரண்டாகக் கிழிப்பதுபோல் அந்தச் சிங்கத்தை வெறுங்கையால் இரண்டாகக் கிழித்தார். ஆனால், இதைப் பற்றித் தன் அம்மாவிடமோ அப்பாவிடமோ சொல்லவில்லை.
-
-
2 நாளாகமம் 15:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அப்போது, ஓதேத்தின் மகன் அசரியாமீது கடவுளுடைய சக்தி வந்தது.
-