உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 32:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 நான் மட்டும்தான் கடவுள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.+

      என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+

      உயிர் கொடுக்கிறவரும் உயிர் எடுக்கிறவரும் நானே.+

      காயப்படுத்துகிறவரும்+ குணப்படுத்துகிறவரும் நானே.+

      என் கையிலிருந்து யாரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.+

  • யோபு 14:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 கடவுளே, நீங்கள் என்னைக் கல்லறையில் புதைத்துவைத்து,+

      உங்கள் கோபம் தீரும்வரை அங்கேயே மறைத்துவைத்து,

      நீங்கள் குறித்திருக்கிற காலம் முடிந்ததும் என்னை நினைத்துப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+

  • சங்கீதம் 30:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவாவே, கல்லறையிலிருந்து என்னைக் கைதூக்கிவிட்டீர்கள்.+

      என் உயிரைக் காப்பாற்றினீர்கள்; சவக்குழியில் புதைந்துவிடாமல் என்னைப் பாதுகாத்தீர்கள்.+

  • சங்கீதம் 49:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால், கல்லறையின் கோரப் பிடியிலிருந்து கடவுள் என்னை விடுவிப்பார்.+

      அவர் என்னைக் கைப்பிடித்துத் தூக்கிவிடுவார். (சேலா)

  • சங்கீதம் 68:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 உண்மைக் கடவுள் நமக்கு மீட்பு தரும் கடவுளாக இருக்கிறார்.+

      உன்னதப் பேரரசரான யெகோவாதான் சாவிலிருந்து நம்மைத் தப்பிக்க வைக்கிறார்.+

  • ஓசியா 13:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 கல்லறையின் பிடியிலிருந்து அவனை விடுவிப்பேன்.

      சாவிலிருந்து அவனை மீட்பேன்.+

      மரணமே, உன் கொடுக்குகள் எங்கே?+

      கல்லறையே, உன் நாச வேலைகள் எங்கே?+

      ஆனாலும், நான் கரிசனை காட்ட மாட்டேன்.

  • யோவான் 11:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் உயிர்த்தெழுதல்+ நடக்கும்போது அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னாள்.

  • 1 கொரிந்தியர் 15:55
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 55 “மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, உன் கொடுக்கு எங்கே?”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்