20 யோய்தாவின் மகன் பெனாயா+ அஞ்சாநெஞ்சம் உள்ளவர். கப்செயேலில்+ வீரச்செயல்கள் பலவற்றைச் செய்திருந்தார். மோவாபியனான அரியேலின் இரண்டு மகன்களைக் கொன்றுபோட்டார். ஒருநாள், பனி பெய்துகொண்டிருந்தபோது தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தைக் கொன்றுபோட்டார்.+