உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 49:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+

  • 1 சாமுவேல் 15:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன், யெகோவாவின் கட்டளையையும் உங்களுடைய வார்த்தையையும் மீறிவிட்டேன். ஜனங்களுக்குப் பயந்து அவர்கள் சொன்னபடி செய்துவிட்டேன்.

  • 1 சாமுவேல் 15:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அப்போது சாமுவேல் சவுலிடம், “இன்றைக்கு யெகோவா உன்னிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி,* உன்னைவிட தகுதியான ஒருவருக்குக் கொடுப்பார்.+

  • 1 சாமுவேல் 16:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உடனே சாமுவேல், எண்ணெய் நிரப்பிய கொம்பை+ எடுத்து, அவனுடைய சகோதரர்களுக்கு முன்பாக அவனை அபிஷேகம் செய்தார். அந்த நாளிலிருந்து, யெகோவாவின் சக்தியால் தாவீது பலம் பெற்றான்.+ பிறகு, சாமுவேல் ராமாவுக்குப் புறப்பட்டுப் போனார்.+

  • 2 சாமுவேல் 5:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ராஜாவானபோது தாவீதுக்கு 30 வயது; அவர் 40 வருஷங்கள் ஆட்சி செய்தார்.+ 5 யூதா கோத்திரத்தாரை எப்ரோனிலிருந்து ஏழு வருஷம் ஆறு மாதம் ஆட்சி செய்தார். அதன் பின்பு, இஸ்ரவேலையும் யூதாவையும் எருசலேமிலிருந்து+ 33 வருஷங்கள் ஆட்சி செய்தார்.

  • 1 நாளாகமம் 11:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரும் எப்ரோனில் இருந்த ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது எப்ரோனில் அவர்களோடு யெகோவா முன்னால் ஒப்பந்தம் செய்தார். சாமுவேல் மூலம் யெகோவா சொன்னபடியே+ அவர்கள் தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்