உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 39:7-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அப்போது, அவருடைய எஜமானின் மனைவி அவரைக் காமக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தாள். “என்னோடு படு!” என்றும் கூப்பிட்டாள். 8 ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்ளாமல், “என் எஜமான் இந்த வீட்டிலுள்ள எல்லாவற்றையும் என் கையில் ஒப்படைத்திருக்கிறார். என் பொறுப்பில் இருக்கிற எதைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. 9 இந்த வீட்டிலேயே எனக்குத்தான் நிறைய அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். எதையுமே அவர் எனக்குத் தராமல் இருக்கவில்லை, உங்களைத் தவிர! ஏனென்றால், நீங்கள் அவருடைய மனைவி! அப்படியிருக்கும்போது, நான் எப்படி இவ்வளவு பெரிய தவறு செய்து, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் பண்ணுவேன்?”+ என்று சொன்னார்.

  • 1 ராஜாக்கள் 15:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஏனென்றால், யெகோவாவுக்குப் பிடித்த காரியங்களையே தாவீது செய்திருந்தார். அவருடைய வாழ்நாள் முழுவதும் கடவுளுடைய கட்டளைகள் எதையுமே மீறவில்லை; ஏத்தியனான உரியா விஷயத்தில் மட்டும்தான் தவறு செய்திருந்தார்.+

  • சங்கீதம் 5:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 பொய் பேசுகிறவர்களை நீங்கள் அழிப்பீர்கள்.+

      வன்முறையில் இறங்குகிறவர்களையும்* ஏமாற்றுக்காரர்களையும் யெகோவா அருவருக்கிறார்.+

  • சங்கீதம் 11:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 யெகோவா தன்னுடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.+

      யெகோவாவின் சிம்மாசனம் பரலோகத்தில் இருக்கிறது.+

      அவருடைய கூர்மையான* கண்கள் மனிதர்களை ஆராய்கின்றன.+

  • எபிரெயர் 13:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின்* புனிதத்தைக் கெடுக்காதீர்கள்.+ ஏனென்றால், பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்