31 “இந்தச் சதியில் அப்சலோமுடன்+ அகித்தோப்பேலும் சேர்ந்துகொண்டார்”+ என்ற செய்தி தாவீதுக்கு வந்தது. உடனே தாவீது, “யெகோவாவே, தயவுசெய்து அகித்தோப்பேலின் ஆலோசனையை முட்டாள்களின் ஆலோசனைபோல் ஆக்கிவிடுங்கள்”+ என்று சொல்லி மன்றாடினார்.+
34 அதனால் நகரத்துக்கே திரும்பி போ. அப்சலோமிடம் போய், ‘ராஜாவே, நான் உங்கள் ஊழியன். இதுவரை உங்கள் அப்பாவுக்கு ஊழியம் செய்தேன், இனி உங்களுக்கு ஊழியம் செய்வேன்’+ என்று சொல். அப்போதுதான் அகித்தோப்பேலின் ஆலோசனையை உன்னால் ஒன்றுமில்லாமல் ஆக்க முடியும்.+
23 அந்தக் காலத்தில், அகித்தோப்பேல் கொடுத்த ஆலோசனை உண்மைக் கடவுளின் ஆலோசனையாகவே கருதப்பட்டது. தாவீதும் சரி, அப்சலோமும் சரி, அகித்தோப்பேல் கொடுத்த எல்லா ஆலோசனைகளையும்+ அப்படித்தான் உயர்வாகக் கருதினார்கள்.