-
ஆதியாகமம் 11:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அப்போது யெகோவா, “இதோ! அவர்கள் எல்லாரும் ஒரே மொழியைப்+ பேசிக்கொண்டு ஒன்றாக இருக்கிறார்கள். அதனால்தான், இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இனி அவர்கள் திட்டம் போடுகிறபடியெல்லாம் செய்துவிடுவார்கள். 7 அதனால் நாம்+ இறங்கிப் போய்,* அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவது புரியாதபடி அவர்களுடைய மொழியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்” என்று சொன்னார்.
-
-
அப்போஸ்தலர் 5:38, 39பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
38 அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனுஷர்களுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள், இவர்களை விட்டுவிடுங்கள்; இந்தத் திட்டம் அல்லது செயல் மனுஷர்களுடையதாக இருந்தால், அது ஒழிந்துபோகும். 39 ஆனால், அது கடவுளுடையதாக இருந்தால், உங்களால் அதை ஒழிக்கவே முடியாது;+ அதில் தலையிட்டால், நீங்கள் கடவுளோடு போர் செய்கிறவர்களாகக்கூட ஆகிவிடலாம்”+ என்று சொன்னார்.
-