உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 18:7-12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அப்போது, பூமி பயங்கரமாகக் குலுங்கியது.+

      அவருடைய கோபத்தால் மலைகளின் அஸ்திவாரங்கள் அதிர்ந்தன.

      அவை கிடுகிடுவென ஆடின.+

       8 அவருடைய மூக்கிலிருந்து புகை எழும்பியது.

      சுட்டுப்பொசுக்கும் தீ அவர் வாயிலிருந்து புறப்பட்டது.+

      தகதகக்கும் தணல்கள் அவரிடமிருந்து தெறித்தன.

       9 அவர் இறங்கியபோது வானத்தை வளைத்தார்.+

      கார்மேகங்கள் அவருடைய காலடியில் இருந்தன.+

      10 கேருபீனின் மேல் ஏறி அவர் பறந்து வந்தார்.+

      தேவதூதரின்* இறக்கைகள்மேல் உட்கார்ந்து வேகமாக இறங்கி வந்தார்.+

      11 பின்பு, இருளும்+ கருத்த மழைமேகங்களும்+

      ஒரு கூடாரம்போல் தன்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்தார்.

      12 அவருடைய பிரகாசமான சன்னிதியிலிருந்து

      ஆலங்கட்டிகளும்* நெருப்புத் தணல்களும் அந்த மேகங்களைத் துளைத்துக்கொண்டு வந்தன.

  • சங்கீதம் 77:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உங்களுடைய இடிமுழக்கத்தின் சத்தம்,+

      ரதங்களுடைய சக்கரங்களின் சத்தத்தைப் போல இருந்தது.

      மின்னல்களின் வெளிச்சம் பூமியைப் பிரகாசிக்க வைத்தது.+

      பூமி அதிர்ந்து, குலுங்கியது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்