உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 22:8-16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 பூமி அதிர்ந்து பயங்கரமாகக் குலுங்கியது;+

      அவருடைய கோபத்தால் வானத்தின் அஸ்திவாரங்கள் அதிர்ந்தன,+

      அவை கிடுகிடுவென ஆடின.+

       9 அவருடைய மூக்கிலிருந்து புகை எழும்பியது.

      சுட்டுப்பொசுக்கும் தீ அவர் வாயிலிருந்து புறப்பட்டது.+

      தகதகக்கும் தணல்கள் அவரிடமிருந்து தெறித்தன.

      10 அவர் இறங்கியபோது வானத்தை வளைத்தார்,+

      கார்மேகங்கள் அவருடைய காலடியில் இருந்தன.+

      11 கேருபீனின் மேல் ஏறி அவர் பறந்து வந்தார்.+

      தேவதூதரின்* இறக்கைகள்மேல் காட்சி தந்தார்.+

      12 பின்பு, இருளையும் கருத்த மழை மேகங்களையும்

      ஒரு கூடாரம்போல் தன்னைச் சுற்றிப் போட்டுக்கொண்டார்.+

      13 அவருடைய பிரகாசமான சன்னிதியில் நெருப்புத் தணல்கள் தகதகத்தன.

      14 பின்பு, யெகோவா வானத்திலிருந்து இடிபோல் முழங்கினார்;+

      உன்னதமான கடவுள் தன்னுடைய குரலைக் கேட்கச் செய்தார்.+

      15 அம்புகளை எறிந்து+ எதிரிகளைச் சிதறிப்போக வைத்தார்;

      மின்னலை அனுப்பி அவர்களைக் குழம்பிப்போக வைத்தார்.+

      16 யெகோவா அதட்டினார்,

      அவருடைய மூச்சுக்காற்று பலமாக அடித்தது.+

      அப்போது, கடலின் அடிப்பரப்பு வெளியே தெரிந்தது;+

      பூமியின் அஸ்திவாரங்களும் தெரிந்தன.

  • சங்கீதம் 77:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உங்களுடைய இடிமுழக்கத்தின் சத்தம்,+

      ரதங்களுடைய சக்கரங்களின் சத்தத்தைப் போல இருந்தது.

      மின்னல்களின் வெளிச்சம் பூமியைப் பிரகாசிக்க வைத்தது.+

      பூமி அதிர்ந்து, குலுங்கியது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்