13 பின்பு, யெகோவா வானத்திலிருந்து இடிபோல் முழங்கினார்.+
உன்னதமான கடவுள் தன்னுடைய குரலைக் கேட்கச் செய்தார்.+
அப்போது, ஆலங்கட்டிகளும் நெருப்புத் தணல்களும் கொட்டின.
14 அம்புகளை எறிந்து எதிரிகளைச் சிதறிப்போக வைத்தார்.+
மின்னலை அனுப்பி அவர்களைக் குழம்பிப்போக வைத்தார்.+
15 யெகோவாவே, நீங்கள் அதட்டினீர்கள்.
உங்கள் மூச்சுக்காற்று பலமாக அடித்தது.+
அப்போது, ஆறுகளின் அடிப்பரப்புகள் வெளியே தெரிந்தன.+
பூமியின் அஸ்திவாரங்களும் தெரிந்தன.
16 உயரத்திலிருந்து அவர் தன்னுடைய கையை நீட்டி,
என்னைப் பிடித்து, ஆழமான தண்ணீரிலிருந்து தூக்கிவிட்டார்.+