17 உயரத்திலிருந்து அவர் தன்னுடைய கையை நீட்டி,
என்னைப் பிடித்து, ஆழமான தண்ணீரிலிருந்து தூக்கிவிட்டார்.+
18 பலம்படைத்த எதிரியிடமிருந்து என்னைக் காப்பாற்றினார்,+
என்னைவிட வலிமையான விரோதிகளிடமிருந்து என்னை விடுவித்தார்.
19 ஆபத்து நாளில் அவர்கள் எனக்கு எதிராக வந்தார்கள்,+
ஆனால், யெகோவா எனக்குத் துணையாக இருந்தார்.
20 பாதுகாப்பான இடத்துக்கு என்னைக் கொண்டுவந்தார்;+
என்மேல் வைத்திருந்த பிரியத்தால் என்னைக் காப்பாற்றினார்.+