-
1 நாளாகமம் 21:18-23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அப்போது, யெகோவாவின் தூதர் காத் தீர்க்கதரிசியிடம்,+ “நீ தாவீதிடம் போய், எபூசியனான ஒர்னானின் களத்துமேட்டில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டச் சொல்”+ என்றார். 19 யெகோவாவின் பெயரில் காத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து தாவீது அங்கே போனார். 20 இதற்கிடையே, ஒர்னான் தன்னுடைய களத்துமேட்டில் கோதுமையைப் போரடித்துக்கொண்டிருந்தார். அவர் திரும்பியபோது அந்தத் தேவதூதரைப் பார்த்தார்; அப்போது, அவருடன் இருந்த நான்கு மகன்களும் ஓடி ஒளிந்துகொண்டார்கள். 21 தாவீது தன்னிடம் வருவதை ஒர்னான் பார்த்தார். உடனே களத்துமேட்டிலிருந்து வெளியே வந்து அவர் முன்னால் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார். 22 அப்போது தாவீது ஒர்னானிடம், “இந்தக் களத்துமேட்டில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்ட வேண்டும். அப்போதுதான் மக்களைத் தாக்குகிற கொள்ளைநோயைக் கடவுள் நிறுத்துவார்.+ அதனால் இதை எனக்கு விற்றுவிடு, இந்த இடத்துக்கு என்ன விலையோ அதை உனக்குத் தந்துவிடுகிறேன்” என்று சொன்னார். 23 அப்போது ஒர்னான், “ராஜாவே, என் எஜமானே, இந்த இடத்தை நீங்கள் சும்மாவே எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பப்படியே இங்கே பலிபீடம் கட்டுங்கள். இதோ, இந்த மாடுகளைத் தகன பலி கொடுங்கள், போரடிக்கும் பலகையை+ விறகாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கோதுமையை உணவுக் காணிக்கையாகக் கொடுங்கள். இவை எல்லாவற்றையும் உங்களுக்குத் தருகிறேன்” என்று சொன்னார்.
-