உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 3:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அவனைத் துரத்திய பின்பு, வாழ்வுக்கான மரத்துக்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்கு ஏதேன் தோட்டத்தின் கிழக்கே கேருபீன்களை+ நிறுத்தினார். சுடர்விட்டபடி எப்போதும் சுழன்றுகொண்டிருந்த வாளையும் அங்கே வைத்தார்.

  • யாத்திராகமம் 25:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 தங்கத்தைச் சுத்தியால் அடித்து இரண்டு கேருபீன்களைச் செய்ய வேண்டும். அவை மூடியின் இரண்டு முனைகளிலும் இருக்க வேண்டும்.+

  • 1 ராஜாக்கள் 6:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 பின்பு, அந்தக் கேருபீன்களை+ மகா பரிசுத்த அறையில் வைத்தார். கேருபீன்கள் சிறகுகளை விரித்தபடி நின்றன. அதனால், ஒரு கேருபீனின் சிறகு ஒரு சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தது, அடுத்த கேருபீனின் சிறகு மறு சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தது. இரண்டு கேருபீன்களின் மற்ற சிறகுகள் அறையின் நடுப்பக்கத்தில் ஒன்றையொன்று தொட்டபடி இருந்தன.

  • 2 நாளாகமம் 3:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அந்த அறையின் உட்கூரையையும் நிலைக்கால்களையும் சுவர்களையும் கதவுகளையும் தங்கத்தால் தகடு அடித்தார்.+ சுவர்களில் கேருபீன் உருவங்களைப் பொறித்தார்.+

  • எசேக்கியேல் 41:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 நுழைவாசலின் மேல்பகுதியையும், ஆலயத்தின் உட்புறத்தையும், அதன் வெளிப்புறத்தையும், சுற்றிலும் இருந்த சுவரையும் அவர் அளந்தார். 18 அங்கே கேருபீன்களுடைய உருவங்களும் பேரீச்ச மர உருவங்களும் செதுக்கப்பட்டிருந்தன.+ இரண்டிரண்டு கேருபீன்களுக்கு நடுவே ஒரு பேரீச்ச மரம் இருந்தது. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டு முகங்கள் இருந்தன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்