-
2 நாளாகமம் 4:18-22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 இந்தச் சாமான்களையெல்லாம் சாலொமோன் மிக ஏராளமாகச் செய்தார்; இவற்றுக்காகப் பயன்படுத்திய செம்பை எடை போடவில்லை.+
19 உண்மைக் கடவுளின் ஆலயத்துக்காக இந்தச் சாமான்கள் எல்லாவற்றையும் சாலொமோன் செய்தார்:+ தங்கப் பீடம்,+ படையல் ரொட்டிகளை வைக்க மேஜைகள்+ ஆகியவற்றைச் செய்தார்; 20 மகா பரிசுத்த அறைக்கு முன்னால் எரிந்துகொண்டிருப்பதற்காக விளக்குத்தண்டுகளையும் அவற்றின் அகல் விளக்குகளையும் சுத்தமான தங்கத்தில் செய்தார்.+ இவை எல்லாவற்றையும் முறைப்படி செய்தார். 21 அதற்கான மலர்கள், அகல் விளக்குகள், இடுக்கிகள் ஆகியவற்றைத் தங்கத்தில், அதுவும் சொக்கத்தங்கத்தில் செய்தார். 22 திரி வெட்டும் கருவிகள், கிண்ணங்கள், கோப்பைகள், தணல் அள்ளும் கரண்டிகள் ஆகியவற்றைச் சுத்தமான தங்கத்தில் செய்தார். ஆலயத்தின் நுழைவாசல், மகா பரிசுத்த அறையின் உட்புற கதவுகள்,+ ஆலயத்தின்* கதவுகள் ஆகியவற்றையும் தங்கத்தில் செய்தார்.+
-